மயிலாடுதுறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மயிலாடுதுறையில் 30 வருடங்களுக்கு முன்பு படித்த ஏ.வி.சி.தொழில்நுடபக்கல்லூரி மாணவர்களின் முதல் சந்திப்பு நடைபெற்றது.
மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தலில் ஏவிசி கல்லூரியின் இரண்டாவது பரிணாமம் பாலிடெக்னிக் கல்லூரி, இது 1983ல் 180 மாணவர்களுடன் சிறிய இடத்தில் துவங்கப்பட்டது.
தற்பொழுது அடுக்குமாடி கட்டிடங்களுடன் ஆயிரக்கணக்கானோர் பயிலும் மிகப்பெரிய கல்லூரியாக திகழ்கிறது. 40 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இக்கல்லூரி மாணவர்கள் தொழில்முனைவோராக அரசுப் பணியாளராக வெளிநாட்டில் வேலைசெய்பவராக என பரவி சென்றுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் தாங்கள் படித்த நிறுவனத்தில் கூடுவதைப் பார்த்த இந்ததொழில்நுட்ப மாணவர்களது மனதிலும் பழைய மாணவர்கள் சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது, இதில் 1991 முதல் 1994வரை தொழில்நுட்பம் பயின்றவர்கள் ஒன்றாக கூடவேண்டும் என்று முடிவெடுத்தனர்.
கூட்டு முயற்சியாக பல மாதம் போராடி ஒன்றினைத்தனர். தாங்கள் கல்வி பயின்றி கல்லூரி வளாகத்தில் அதே கல்லூரி முதல்வர், தங்களுக்குப் பாடம் கற்பித்தவர்கள் பேராசிரியர்கள், என அனைவரையும் ஒன்றினைத்து தாங்கள் படித்த கல்லூரி வளாகத்திலேயே ஒரு விழாவாக கொண்டாடினர்.
46 வயது முதல் 50 வயதுடைய மாணவர்களும் 60வது முதல் 85 வயதுவரை மூத்த ஆசிரியர்களும் கூடினர், இவர்கள் ஆசிரியர்களிடம் கல்வி பயின்றதும் ஆசிரியர்களின் கண்டிப்பும் என ஆசிரியர் புராணமே பிரதானமாக இருந்தது. உடல்நலத்திற்கு முக்கியத்துவம் அளியுங்கள், உணவில் கட்டுப்பாடாக இருக்கவேண்டும், எளிமையான வாழ்க்கை வாழுங்கள், கண்டிப்பாக குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள் என பேராசிரியர்களின் வேண்டுகோள்கள் முன்னாள் மாணவர்களுக்கு அறிவுரை அதிகமாக வழங்கப்பட்டது, இறுதியில் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டனர். வருடா வருடம் ஒன்றினைவோம் என்று உறுதிகூறிச் பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.