முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைப்பெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-29 07:32 GMT
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில், 1976, 77, 78ம் ஆண்டுகளில், பழைய எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சந்திப்பு கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, 16வது ஆண்டாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், நேற்று, பள்ளியில் நடந்தது. இதில், புதிதாக பங்கேற்ற, 82- - 89ல் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தாங்கள் பள்ளியில் படித்தபோது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையும், தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தனர். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து, பள்ளி படிப்பிற்குப்பின், பணி விபரம், குடும்ப சூழல் என, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பள்ளி வளர்ச்சி மற்றும் தேவையான உபகரணங்களை வழங்குவது என, முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர்.