ஏம்பல்- பொன்னமராவதி மார்க்கமாக பஸ் இயக்க கோரிக்கை

பேருந்து இயக்குவதன் மூலம் மக்கள் ஒரு லட்சம் மக்கள் பயனடைவர் எனவும் தகவல்

Update: 2023-12-03 07:03 GMT

ஏம்பல்- பொன்னமராவதி மார்க்கம் பஸ் இயக்க கோரிக்கை!

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஏம்பல்- பொன்னமராவதி மார்க்கத்தில் பஸ் இயக்க கோரி அரிமளம் ஒன்றிய கவுன்சிலர் கணேசன் கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அரிமளம் ஒன்றியம் ஏம்பல் ஊரை சுற்றி மதகம், திருவாக்குடி, குருங்களூர், இரும்பா நாடு ஆகிய ஊராட்சிகள் உள்ளன. ஏம்பலில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம், வங்கிகள், போலீஸ் நிலையம் ,மின்சார அலுவலகம் ,அழகிய சிவன் கோவில் போன்றவை உள்ளன. இப்பகுதியில் பத்தாயிரம் பேர் வசிக்கின்றன. இவர்களின் பிரதான தொழில் விவசாயம் இப்பகுதி மக்கள் விதை உரம், பூச்சி மருந்து வாங்கவும் தாங்கள் விளைவித்த நெல், காய்கறிகளை விற்கவும் கே புதுப்பட்டி, அரிம்பளம் புதுவயல், திருமயம், பொன்னமராவதி செல்ல வேண்டி உள்ளது. மாணவ, மாணவியர் உயர் கல்வி கற்க திருமயம் செல்கின்றனர். ஊராட்சி ஒன்றியம், வேளாண்மை சமூக நலத்துறை, வட்டார கல்வி அலுவலகங்கள், மருத்துவமனை, நீதிமன்றங்களுக்கு அரிமளம், திருமயம் செல்ல வேண்டி உள்ளது. எனவே அரசு ஏம்பல் அல்லது ஆவுடையார் கோவிலில் இருந்து கே புதுப்பட்டி அரிமளம் ,திருமயம், ராங்கியம், பூலாங்குறிச்சி வழியாக பொன்னமராவதிக்கு பஸ் விட வேண்டும் இதன் மூலம் ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவர் இந்த வழியில் உள்ள சுற்றுலா தளங்களும் மேம்படும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News