அம்பேத்கர் பிறந்த நாள் விழா : கனிமொழி, அமைச்சர்கள் மரியாதை!

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update: 2024-04-15 01:47 GMT
அம்பேத்கர் பிறந்த நாள் விழா : கனிமொழி, அமைச்சர்கள் மரியாதை!

கனிமொழி 

  • whatsapp icon
தூத்துக்குடியில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் 133வது பிறந்த நாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, நிர்மல் ராஜ், பால குருசாமி கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், இசக்கி ராஜா, கீதா முருகேசன், தூத்துக்குடி மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஜே எஸ் ரூபஸ் அமிர்தராஜ், போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மரியதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News