அம்பேத்கர் பிறந்த நாள்: கமலஹாசன் டுவீட்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கமலஹாசன் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்;
By : King 24X7 News (B)
Update: 2024-04-14 09:37 GMT
கமல்
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள X தள பதிவில் பரந்துபட்ட இந்திய சமுதாயம் விடுதலை பெற்ற கையோடு மதத்தாலும் சாதிச் சழக்காலும் மூச்சுமுட்டிக் கிடந்தபோது தெளிவிக்க வந்த தென்றல்; மனிதருள் சமத்துவம் பேணும் பேச்சைத் தொடங்கிய அண்ணல்; அதை அரசியல் சாசனம் என்று ஆதாரமாகச் செய்தும் வைத்த பெருமகன் பாபா சாகேப் அம்பேத்கர். மறுபடி சாதிப் பேச்சுகள் தொடங்கியிருக்கும் இந்நேரத்தில் அவரது தேவை முன்னெப்போதையும்விட கூடுதலாக உள்ளது.
அவர்தம் பிறந்த நாளான இன்று அவருடைய சிந்தனையை மறுபடி கையிலெடுப்போம். அண்ணல் பாதையை அனைவருக்குமான பாதையாக ஆக்கிக்கொள்வோம்.