விழுப்புரம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை பறிமுதல்.

Update: 2023-11-23 03:17 GMT
 அம்பேத்கர் சிலை பறிமுதல்.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் அருகே கோலியனூர் தோப்புக்காலனி பகுதியில் அப்பகுதியை சேர்ந்த மக்கள், அம்பேத்கரின் சிலை வைக்க முடிவு செய்து 2 அடியில் பீடம் அமைத்தனர்.பின்னர் 4 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன அம்பேத்கரின் முழு உருவ சிலையை கொண்டு வந்து நேற்று முன் தினம் இரவு அந்த பீடத்தில் வைத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் கிருஷ்ணதாஸ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம், அனுமதியின்றி தேச தலைவர்களின் சிலைகளை வைக்கக்கூடாது என்றும் முறையாக வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே சிலையை வைக்க வேண்டுமென அறிவுரை கூறி அந்த சிலையை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர். மேலும் இது தொடர்பாக 17 பேர் மீது வளவனூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News