தமிழிசையிடம் அமித்ஷா நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது - ராஜேஷ்குமார்

பெண் என்றும் பாராமல் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது என ராஜேஷ்குமார் எம்எல்ஏ தெரிவித்தார்.

Update: 2024-06-15 07:32 GMT

 ராஜேஷ்குமார் எம்எல்ஏ

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது,மாநில கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் நடக்கும் அரசு நீடிப்பது கடினம் தமிழகத்தில் பாஜக வின் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பது வடதமிழகத்தில் பாமக வின் தயவால் தான் வாக்கு சதவீதம் உயர்ந்து உள்ளது இது பாஜகவின் தனிபட்ட செல்வாக்கு கிடையாது தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

இப்போது தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம் அவர்கள் எங்களுக்காக கடுமையாக உழைத்து இருக்கிறார்கள் இந்தியா கூட்டணியின் உழைப்பால் மிக பெரிய வெற்றி கிடைத்துள்ளது வரும் காலத்தில் திமுக கூட்டணி தொடரும் காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது பெண்களுக்கு தனி மதிப்பு அளிக்கும் கட்சி பொது மேடை அரசு விழாவில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவில் முன்னாள் கவர்னர் தமிழிசையை மத்திய உள் துறை அமைச்சர் அமிர்ஷா கை நீட்டி பேசி அவமதித்தது கண்டிக்கதக்கது.  நாடார் சமூகத்திற்கு  இது அவமானம் ஏற்படுத்தும் செயல்.

அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து உள்ளது பல தொகுதிகளில் டெப்பாசிட் இழந்து உள்ளனர் அண்ணாமலை கூறுவது போல தமிழக த்தில் பாஜக வளர்ந்து இருந்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது ஏன் மக்கள் மன்றத்தில் நிறுபித்தால் மட்டுமே ஒரு கட்சி பலமானதா, பலவீனமானது என்பது தெரியும் விவேகானந்த மண்டபத்தில் தியானம் செய்ய மோடிக்கு அருகதை இல்லை விவேகானந்தர் போதனைக்கும் இவருக்கும் எந்த கொள்கையும் கிடையாது பிரதமர் அனைவருக்கும் பொதுவானவர் ஆனால் அவர் குறிப்பிட்ட மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் என்று பேட்டியின் போது அவர் தெரிவித்தார்

Tags:    

Similar News