2026-ல் அம்மாவின் அரசு அமையும்: எம் ஆர் விஜயபாஸ்கர்

2026-ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அம்மாவின் அரசு அமையும் என எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-15 14:16 GMT

வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் 

கரூர் நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் வேட்பாளர் தங்கவேல் களம் இறக்கப்பட்டுள்ளார். இன்று கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் செல்லாண்டிபுரம், மஞ்ச நாயக்கன்பட்டி, காணியாளம்பட்டி,

வீரியபட்டி, முத்தம்பட்டி உள்ளிட்ட பட்டி தொட்டி பகுதிகளில் இன்று முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உடன் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். முத்தம்பட்டி பகுதிக்கு வந்தபோது, அப்பகுதி மக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே பேசிய எம் ஆர் விஜயபாஸ்கர்,

ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் கொடுப்பதாக திமுகவினர் அறிவிப்பு செய்தனர். இதுவரை கொடுத்தனரா? இப்போது மீண்டும் தேர்தல் அறிக்கையில் 1100 மதிப்புள்ள சிலிண்டரை 500க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ஒருவேளை அவர்கள் காலி சிலிண்டர் ஏதேனும் வழங்குவார்களோ! என சந்தேகம் தெரிவித்தார். திமுகவினர் நீட் தேர்வு ரத்து செய்வதாகவும், கல்வி கடனை ரத்து செய்வதாகவும் கூறி போகாத ஊருக்கு வழி சொல்வதாக திமுகவினர் தொடர்ந்து பொய் கூறி வருவதாக தெரிவித்த அவர், திமுக ஆட்சி ஊழல் ஆட்சி என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அம்மாவின் அரசு அமையும். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்த போது, கூடி இருந்த மக்கள் கைகளை தட்டி கரகோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News