பேரூராட்சி பெண் கவுன்சிலரை போனில் மிரட்டிய அமமுக நிர்வாகி

கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரய் பேரூராட்சியில் பெண் கவுன்சிலரை ஆபாசமாக பேசிய அமமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-03-08 12:55 GMT
மிரட்டல் 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், தற்போது 5-ம் வார்டு அதிமுக கவுன்சிலருமாக இருப்பவர் பூமதி.  பூமதி சமீபத்தில் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் பேசும்போது தனது வார்டில் குடிநீர் மோட்டாரை யாரோ திருடி சென்று விட்டனர். அதை உடனடியாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.      

இது குறித்து செல்போனில் கேள்வி எழுப்பிய அமமுக நிர்வாகி, பேரூராட்சி கூட்டத்தில் என்னைப் பற்றி ஏன் பேசினீர்கள் என கேட்டார். அப்போது பூமதி நான் யார் குறித்தும் பேசவில்லை.  நான் எனது வார்டில் மோட்டாரை தூக்கி சென்றவர்கள் குறித்து தான் கூறினேன் என்றார்.        

ஆனால் அந்த நிர்வாகி தொடர்ந்து பூமதியை மிரட்டும் வகையில் பேசினார். இருவரும் மாறி மாறி போனில் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நிர்வாகி நான் யார் என தெரியாமல் விளையாடுகிறாய். உன் தாலியை அறுத்து விடுவேன் என கூறி பூமதியை ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். இதனால் பூமதி கோபத்தில் போனை துண்டித்துள்ளார்.      

இவர்களுக்குள் நடந்த உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் நேற்று மகளிர் தின விழா கொண்டாடிய நிலையில், மகளிருக்கான உரிமைகளை நிலைநாட்டு முறையில் பல்வேறு நிகழ்ச்சிகள்  நடந்த நிலையில் உள்ளாட்சி பொறுப்பில் உள்ள பெண் ஒருவரை அரசியல் பிரமுகர் ஒருவர் ஆபாசமாக பேசி மிரட்டி உள்ள சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.      

 இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News