சேலம் அரசு ஆஸ்பத்திரியில்18 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

சேலம் அரசு ஆஸ்பத்திரியில்18 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

Update: 2024-05-20 11:02 GMT

கோப்பு படம் 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி கூடமலை பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் டாக்டர்கள் விசாரித்தபோது, திருமணம் வயது எட்டுவதற்கு முன்பே அதாவது 17 வயதில் கூடமலை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டது, அவர் மூலம் கர்ப்பம் அடைந்திருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், இதுபற்றி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், ஈரோட்டில் கார் டிரைவராக பணியாற்றி வரும் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் அவர் அந்த பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதும், அதன்மூலம் கர்ப்பிணியாகி குழந்தை பெற்றெடுத்ததும் தெரியவந்தது. 

 இதையடுத்து காதல் கணவன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News