அருப்புக்கோட்டையில் 80 வயது மூதாட்டி மாயம்
அருப்புக்கோட்டையில் 80 வயது மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-25 15:49 GMT
மாயமான மூதாட்டி
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற 80 வயது மூதாட்டியை காணவில்லை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் சுந்தரி வயது 80 இவர் கடந்த 23ஆம் தேதி காலை அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும்,
பல்வேறு பகுதியில் உறவினர்கள் தேடியும் இவர் கிடைக்காத அடுத்து அவரை கண்டுபிடித்து தர கோரி அவருடைய மகன் செல்வராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்