மூதாட்டியிடம்  எட்டு பவுன் சங்கிலி பறிப்பு  

பள்ளிப்பாளையம் அருகே மூதாட்டியிடம்  எட்டு பவுன் சங்கிலி பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-11-03 09:58 GMT

காவல்நிலையம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. நூற்பாலை அதிபரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். தற்பொழுது வீட்டில் அவரது மனைவி பழனியம்மாள் வசித்து வருகிறார். பழனியம்மாள் சில வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  மாலை வீடு வாடகைக்கு கேட்டு வந்த இரண்டு பெண்கள் பழனியம்மாளிடம் நீண்டகாலம் பழகியவர்கள் போல் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென பெண்கள் பழனியம்மாளின் கழுத்தை நெரித்து அவரது கழுத்தில் இருந்த எட்டு பவுன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

Advertisement

அதிர்ச்சியில் இருந்து மீண்ட பழனியம்மாள் கத்தி கூச்சிலிடவே, அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து பழனியம்மாளிடம் விசாரித்து, பிறகு பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து பழனியம்மாள் கழுத்தில் இருந்த எட்டு பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மர்ம பெண்கள் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... பட்டப் பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

Tags:    

Similar News