திருச்சியில் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை
திருச்சியில் செய்த சுயேட்சை நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற தேர்தலை நடைபெற உள்ளது முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று மதியம் 1. 30 மணிக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜேந்திரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகை 25, 000 ரூபாய் முழுவதும் 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்து அவர் கூறும்போது பத்து ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க வேண்டும் என்று எவ்வளவுதான்,
விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், ஒரு சில கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இதனால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடங்களில் சண்டை சச்சரவுகளும் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய் நாணயம் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.