பவ்டா கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு
பவ்டா கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 03:44 GMT
பன்னாட்டு கருத்தரங்கு
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பவ்டா கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் பன்னாட்டு தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு பவ்டா நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார். பவ்டா நிறுவன துணை மேலாண்மை இயக்குனர் அல்பினா ஜாஸ் முன்னிலை வகித்தார். மாணவி கவி பிரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை பேரா சிரியர் பரமசிவம் மற்றும் ஆப்பிரிக்கா எத்தோப்பிரியா சமரா பல்கலைக்கழக வணிக பொருளாதார ஆராய்ச்சி ஆலோசகரும், கணக்கியல் மற்றும் நிதித்துறை பேராசிரியருமான சின்னையா அன்பழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிலையான வளர்ச்சியை நோக்கி டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் வணிகம் என்ற தலைப்பில் பேசி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் கல்லூரி முதல்வர் சுதா கிருஷ்ட்டி ஜாய், துணை முதல்வர் சேகர், கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் கணேஷ் குமார் மற்றும் துணை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர் முடிவில் வணிகவி யல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஜனனி நன்றி கூறினார்.