ஓசூர் அருகே கை தொழிலை நம்பி வாழ்ந்து வரும் வயதான தம்பதிகள்
ஓசூர் அருகே பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் தன் கை தொழிலை நம்பி வாழ்ந்து வரும் வயதான தம்பதிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி அண்ணா நகரில் சுப்பிரமணி (66) அம்சவேணி (61) என்பவர் வாடகை வீட்டில் சுமார் 15 வருடமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் 3 பேருக்கும் திருமணமாகி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வயதான தம்பதிகள் தையல் இயந்திரத்தை வைத்து , அக்கம் பக்கம் வீட்டார் கொடுக்கும் துணிகளை தைய்த்து குடும்பம் நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் முதியோர் உதவி தொகை பெறும் நிலையில் , வாடகை வீட்டில் வசித்து வருவதால் அந்த உதவி தொகை மாதம் மாதம் வீட்டிற்கு வாடகை கட்டவே சரியாக இருக்கும் என அந்த தம்பதிகள் கூறுகின்றனர்.
மேலும் 3 பெண்பிள்ளைகள் இருந்தாலும் இதுவரை எங்களுக்கு யாரும் உதவிட வில்லை எனவும் , உணவிற்க்கும் மருந்திற்க்கும் பணம் இன்றி சிரமப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதன் சம்மந்தமாக மேலும் கூறுகையில் தன் மனைவிக்கு கண் பார்வையின்றி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கண் அகற்றப்பட்டுவிட்டதாகவும் தற்போது என் மனைவி கல்லீரல் பிரச்சினை உள்ளது எனவும்,
எனக்கும் கடந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் முகத்தில் அறுவை சிகிச்சை செய்து உள்ளதாகவும் அந்த வயதான தம்பதிகள் கவலையுடன் தாங்கள் கடந்து வந்த பாதையை தெரிவித்தார். தையல் தொழிலை வைத்து போதிய பணம் இன்றி வாழ்க்கையே நகரத்தில் செல்வதாகவும், எங்களுக்கு மருந்திற்க்கும் உணவிற்கும் பணம் இருந்தாலே போதுமானது என கண்ணீர் மல்க தங்களது கவலையை கூறி வருகின்றனர். வயதாக தம்பதிகள்.