கருங்கல் அருகே வீட்டின் முன் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

கருங்கல் அருகே வீட்டு முன்பு மயங்கி விழுந்த முதியவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Update: 2024-05-13 12:17 GMT

காவல் நிலையம் 

கருங்கல் அருகே கீழ ஆப்பிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ்.விவசாயி. மகன்களுக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார் இதனால் மரியதாஸ் கடும் மன அழுத்தத்தில்இருந்து வந்துள்ளார்.

மேலும் அவருக்கு மதுப்பழக்கமும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மரியதாஸ் வீட்டின் அருகே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News