கரூர் அருகே டீக்கடையில் புகையிலைப் பொருட்களை விற்ற முதியவர் கைது
கரூர் அருகே டீக்கடையில் புகையிலைப் பொருட்களை விற்ற முதியவர் கைது. காவல்துறை நடவடிக்கை.;
Update: 2024-03-13 17:02 GMT
புகையிலைப் பொருட்கள்
கரூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மார்ச் 12-ம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர்- கோவை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கோவை சாலையில் உள்ள கே.எம் டீ ஸ்டாலில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா, ஆத்தூர், பூலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி வயது 59 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் கரூர் மாநகர காவல் துறையினர். பின்னர், அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர்.