மர்மமான முறையில் இறந்த முதியவர்!
திண்டுக்கல் அருகில் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-04-24 08:59 GMT
உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட அணைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பிள்ளையார்நத்தம் அருகே உள்ள மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கம் மகன் குனசேகரன்(55) மர்மமான முறையில் இறந்துள்ளார். இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் உடலை அப்புறப்படுத்தவிடாமல் சிறிது நேரம் மதுபானக்கடையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.