கரூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

கரூர் அருகே அதிகாலையில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2024-01-17 14:55 GMT

காவல் நிலையம் 

 கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், தெற்கு கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 53. இவர் ஜனவரி 4ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில், புலியூரில் இருந்து உப்பிடமங்கலம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த காட்டு பெருமாள் என்பவர் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று, ராமசாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

Advertisement

இந்த சம்பவத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த ராமசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராமசாமியின் மகன் நிதீஷ் குமார் வயது 22 என்பவர், இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படும் வகையில் மோதிவிட்டு, நிற்காமல் சென்ற வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News