வேரோடு சாய்ந்த ஆலமரம் - நசுங்கிய டிராக்டர், உயிர் தப்பிய விவசாயி
காரியானூர் அருகே பலத்த காற்றினால் ஆலமரம் சாய்ந்து டிராக்டர் மேல் விழுந்ததில் டிராக்டர் நசுங்கி சேதமடைந்தது. நல்வாய்ப்பாக டிராக்டரில் இருந்த விவசாயி உயிர் தப்பினார்.;
Update: 2024-06-26 07:57 GMT
நசுங்கிய டிராக்டர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட காரியானூர் அருகே சாலையில் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது, இதில் தற்போது கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசி வரும் நிலையில் ஜூலை 25ஆம் தேதி வீசிய பலத்த காற்றில் ஆலமரம் வேரோடு சாலையில் சாய்ந்தது அப்போது சாலையில் விவசாயி ஒருவர் ஒட்டி வந்த டிராக்டர் மீது மரம் சாய்ந்ததில் டிராக்டர் நசிங்கியது இதில் அதிர்ஷ்டவசமாக டிராக்டர் ஓட்டி வந்த விவசாயி உயிர்த்தினார். மிகவும் பழமை வாய்ந்த மரம் காற்றில் சாய்ந்தது மட்டுமல்லாமல் இதில் டிராக்டர் சிக்கிக்கொண்டு விவசாயி உயிர் தப்பிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.