ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ. 88.68 லட்சம் உண்டியல் காணிக்கை
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ. 88.68 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு.. அவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள தட்டு மற்றும் நிரந்தர உண்டியலில் காணிக்கைகளை இட்டுச் செல்வர்.. பணம் மற்றும் உலோகங்களான தங்கம்,வெள்ளி உள்ளிட்டவைகளையும் காணிக்கைகளாக இட்டுச் செல்வர்.
இந்நிலையில் இம்மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் அதிகாரிகள் முன்னிலையில் துவங்கியது.. காணிக்கை என்னும் பணிகளின் அடிப்படையில் நிரந்தரவு உண்டியல் காணிக்கையாக 61,50,681 ரூபாயும்,தட்டு காணிக்கையாக 27 லட்சத்து 17,473 ரூபாயும் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 88 லட்சத்து 68 ஆயிரத்து 154 ரூபாய் கிடைக்கப்பெற்றது மேலும் 206 கிராம் தங்கமும் 564 கிராம் வெள்ளியும் பெறப்பட்டது.. இந்த உண்டியல் காணிக்கை என்னும் பணிகள் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணா, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் ஹர்ஷினி, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி மற்றும் அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன்,மஞ்சுளா தேவி,மருதமுத்து, புவனேஸ்வரி, ஆய்வாளர் சித்ரா முன்னிலையில் நடைபெற்றது.. மேலும் சலவநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் ராமு கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்..