மாவட்ட ஆட்சியரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணி மாறுதல் செய்யும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைய கண்டித்து காத்திருப்பு போராட்டம்;
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கான்வாடி ஊழியர்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக விருதுநகர் மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமையில், அங்கன்வாடி மையங்களில் கர்பிணி பெண்கள், மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என அனைத்து தரப்பினரும் பணி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தமாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டு ஒரு சில மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணியும் முடிந்துள்ளது என்றும், இது சம்மந்தமாக அங்கன்வாடி பணியாளர்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தினர்.
இதைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சில பேருக்கு பணிமாறுதல் கடிதத்தை வழங்கியதை கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்