வால்கோட்டை ஆஞ்சநேயர் சப்பரத்தில் பவனி
வால்கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சப்பர பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-01-15 14:59 GMT
உற்சவம்
வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் பழைய வத்தலக்குண்டு பிரிவு என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற வால்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தியையொட்டி வால்கோட்டை ஆஞ்சநேயர் மின் அலங்கார சப்பரத்தில் பவனி வந்தார்.
ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து புறப்பட்ட சப்பரம் பெரியகுளம் சாலை, வத்தலக்குண்டு நெடுஞ்சாலை, காளியம்மன் கோயில், சந்தைப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.