சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-03-23 00:53 GMT

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம்19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, அதிமுக சார்பில் விக்னேஷ், பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது பாமக வேட்பாளர் முன்னாள் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் தங்கள் கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவுகளை திரட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News