அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
ஆளும் திமுக அரசை கண்டித்து அமமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-03-11 10:35 GMT
கண்டன ஆர்பாட்டத்திற்கு அமமுக அழைப்பு
தமிழக இளைஞர்களின் அரசு பணி கனவை சிதைத்து அவர்களின் எதிர்காலத்தை அடியோடு சீர்குலைக்கும் என்ற தலைப்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று (மார்ச் 11) மாலை 4 மணி அளவில் வண்ணாரப்பேட்டையில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் இசக்கி முத்து அழைப்பு விடுத்துள்ளார்.