ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருடாபிஷேக விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருடாபிஷேக விழா துவங்கியது.

Update: 2024-02-07 15:35 GMT

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலில் வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது

. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடந்த 2016ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளில் இருந்து ஆண்டு தோறும் வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருடாபிஷேக விழா மஹாசாந்தி ஹோமத்துடன் இன்று தொடங்கியது. திருமுக்குளத்தில் இருந்து கோயில் யானை மூலம் புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 108 புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு 108 கலசாபிஷேகம், விஷேச திருமஞ்சனம் , திருவாராதனம் சாத்துமுறை, தீர்த்தகோஷ்டி நடைபெற்றது. இதை தொடர்ந்து நாளை ஆண்டாள் ரெங்க மன்னாருக்கு லட்சார்ச்சனை உடன் வருடாபிஷேக விழா நிறைவு பெறுகிறது.

 விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவரான ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமரஜா மற்றும் உறுப்பினர்கள், செய்து வருகின்றனர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News