முன்விரோதம்; தாக்கியர் மீது வழக்குப்பதிவு
கிளாப்பாளையத்தில் முன்விரோதம் காரணமாக விவசாயி தாக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.;
Update: 2023-12-28 02:16 GMT
கிளாப்பாளையத்தில் முன்விரோதம் காரணமாக விவசாயி தாக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா கிளாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 40; அதே பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன், 75; இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி வயல்வெளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த விஜயகுமாரை வெள்ளையன் தரப்பினர் தாக்கினர். விஜயகுமாரின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வெள்ளையன், சுப்பிரமணியன், அவரது மனைவி ஜெயந்தி, கோவிந்தன் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து செய்து வருகின்றனர்.