லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை - சிக்கிய காசோலை, பணம்
கள்ளக்குறிச்சி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 9 லட்சத்திற்கு காசோலை மற்றும் ரூ.62 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது,
Update: 2024-05-29 04:25 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் இயங்கி வரும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில், கணக்கில் காட்டப்படாத பணம் புழுங்குவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நேற்று மாலை 5:30 மணிக்கு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் தலா ரூ.3 லட்சம் என எழுதப்பட்ட மூன்று வங்கி காசோலைகள் மற்றும் ரூ.62 ஆயிரம் பணம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உதவி இயக்குநர் ராகுல்ராஜ்,29; உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.