குமரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

குமரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

Update: 2024-02-17 11:57 GMT

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பழக்கத்தை தடுக்கும் வகையில் இன்று காலை பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியானது ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தின் அருகில் முடிவடைந்தது.  முதல் பரிசு பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.10,000 ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும், 2ம் பரிசு பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.5,000 ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும், 3ம் பரிசு பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.3,000 ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும்,  10 நபர்களுக்கு  ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது        போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) லொரைட்டா, திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குநர் முனைவர் அருட்பணி நெல்சன்,  ரோஜா வனம் இயக்குநர்கள் அருள் ஜோதி, அருள் கண்ணன், போதையில்லா இந்திய திட்ட உறுப்பினர்கள், முதன்மை பயிற்சி பெறுநர்கள், தன்னார்வலர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News