கருங்குளம் வட்டாரத்தில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
கருங்குளம் வட்டாரத்தில் சுகாதாரத் துறையின் சார்பில் தொற்றுநோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் ஆணைப்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் ஆலோசனைப்படி கருங்குளம் வட்டாரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின் ஏற்படும் தொற்று நோய் தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் மூலம் கருங்குளம் வட்டார பகுதியில் எவ்வித நோய் பாதிப்புகளும் ஏற்படவில்லை நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக தினமும் சுழற்சி முறையில் வட்டாரம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஊராட்சிகள் மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படும்.
குடிநீரில் குளோரின் கலந்து விநியோகப்படுகின்றது. மேலும் வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை நீர் தேங்கியுள்ள இடங்களில் பிளிச்சிங் பவுடர் பந்துகள், வீட்டு குடங்களில் குளோரின் மாத்திரைகள் போடப்பட்டு வருகின்றனர்.
செவிலியர்கள் மூலம் வீடு வீடாக டாக்ஸி சைக்கிளின் மாத்திரைகள் கொடுத்து வருகின்றனர். நேற்றைய தினம் விட்டிலாபுரம் வசவப்பபுரம் வி.கோவில்பத்து ஆகிய ஊராட்சிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதற்கான பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணஜோதி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார் வெங்கடேசன் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்
மேலும் சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், ஐசிடிசி கவுன்சிலர் சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.