பிளாஸ்டிக் தடுப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு
தென்காசி மாவட்டம்,கடையநல்லூரில் அதிகாரிகள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
Update: 2024-03-06 08:10 GMT
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் உத்தரவின் படி நேற்று மாலையில் சுகாதார அலுவலர் வழிகாட்டுதலில் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப் படுத்தப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டனர். இதில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்று கூறி கடைகளில் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தபட்டது.