நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் கலவர தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

கலவர தடுப்பு சிறப்பு வாகனமான வஜ்ரா வாகனத்தை பயன்படுத்துதல், அவர்களை கைது செய்தல், அப்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2024-06-01 10:44 GMT

ஆட்சியர் உமா

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். இதில் கலவரங்களை தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றை மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது, ஒரு இடத்தில் கலவரம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது, காவல்துறை சார்பில் விடுக்கப்படும் எச்சரிக்கை அறிவிப்புகள், கலவரக்காரர்களை கையாளுதல், அந்த சமயத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் பீய்ச்சி அடித்தல், கலவர தடுப்பு சிறப்பு வாகனமான வஜ்ரா வாகனத்தை பயன்படுத்துதல், அவர்களை கைது செய்தல், அப்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

Tags:    

Similar News