AP நகரில் முதியவர் சென்ற டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.
AP நகரில் முதியவர் சென்ற டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.;
AP நகரில் முதியவர் சென்ற டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. கரூர் மாவட்டம், புலியூர் அருகே ஏபி நகரை சேர்ந்தவர் வையாபுரி. வயது 80. இவர் மே 15ஆம் தேதி காலை 8:30 மணி அளவில், புலியூர் - உப்பிடமங்கலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் ஏபி நகர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை முன்பு சென்றபோது, அதே சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வையாபுரி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதில் வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்த வையாபுரிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த வையாபுரி மகள் ராஜலட்சுமி வயது 45 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு செஅன்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.