இணைய வழியில் நில அளவீட்டிற்கு விண்ணப்பம் - ஆட்சியர்
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி துவங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்தார்.
Update: 2024-02-07 11:58 GMT
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் tamilnilam.tn.gov.in என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சாரால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய “எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்“ நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட ”அறிக்கை / வரைபடம்” ஆகியவற்றை மனுதாரர் இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவித்துள்ளார்.