மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுப்பதிவு செய்ய விண்ணப்பம் !

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 3,262 பேரும், மாற்றுத்திறனாளிகள் 1,918 பேரும் என 5 ஆயிரத்து 180 பேர் தபால் ஓட்டுப்பதிவு செய்ய தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

Update: 2024-04-05 05:24 GMT

ஓட்டுப்பதிவு

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று தபால் வாக்குப்பதிவு செய்ய உதவி தேர்தல் அலுவலர்களால் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வீடு, வீடாக சென்று 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டுப்பதிவு செய்யும் பணியை தொடங்குகின்றனர்.

இதற்காக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்த நபர்களின் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று அவர்களது தபால் வாக்குகளை பெற உள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 3,262 பேரும், மாற்றுத்திறனாளிகள் 1,918 பேரும் என 5 ஆயிரத்து 180 பேர் தபால் ஓட்டுப்பதிவு செய்ய தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தபால் வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்குகிறது.

Tags:    

Similar News