தொழில் உரிம வரிகளை புதுப்பிக்க வேண்டுகோள்
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தொழில் உரிம வரிகளை புதுப்பிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Update: 2024-03-14 06:10 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தொழில் உரிம வரிகளை புதுப்பிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 விதி 2003ன் படி தமிழ்நாடு முழுவதும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொழில் வரிகளுக்கான கட்டணங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் வணிகம் செய்யும் வணிகர்கள், சிறுகுறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் தங்கள் வணிக நிறுவனங்களின் தொழில் உரிம வரிகளை புதுப்பித்து கொள்ளவும், இதுவரை தொழில் உரிமங்களை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.