மணிமேகலை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்ப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-17 07:32 GMT

மாவட்ட ஆட்சியர் 

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து, வட்டார கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி, தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே 2023-24-ம் ஆண்டிற்கான விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மணிமேகலை விருதுக்கான முன்மொழிவுகளை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News