அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விண்ணப்பம் வரவேற்பு

திருவாரூர் மாவட்டத்தில், அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-22 13:35 GMT

ஆட்சியர்

அக்னிபாத்திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்ற பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஜனவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News