உரம் விற்பனை உரிமம் பெறுவதற்கான படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் உரம் விற்பனைக்கான உரிமம் பெறுவதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைக்கான 15 நாள்கள் சான்றிதழ் படிப்பு குடுமியான்மலையில் உள்ள மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி நிலையத்தால் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-01-05 09:44 GMT

உரம் விற்பனை உரிமம் பெறுவதற்கான படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் 

தென்காசி மாவட்டத்தில் உரம் விற்பனை உரிமம் பெறுவதற்கான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில், தென்காசி மாவட்டத்தில் உரம் விற்பனைக்கான உரிமம் பெறுவதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைக்கான 15 நாள்கள் சான்றிதழ் படிப்பு புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி நிலையத்தால் (சமிதி) வழங்கப்படுகிறது.

Advertisement

உரம் விற்பனை உரிமம் பெற விரும்புவோா், இச் சான்றிதழ் படிப்பில் சேரலாம். இப் படிப்புக்கு 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டணமாக ரூ.12,500 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத் தொகையை, இயக்குநா், மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி நிலையம் (சமிதி), குடுமியான்மலை என்ற பெயரில் வரைவோலையாகச் செலுத்த வேண்டும். இதுதொடா்பான விவரங்களுக்கு தென்காசி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

Tags:    

Similar News