தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் -ஆட்சியர் தகவல்!
தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஜூலை 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார் .;
By : King 24x7 Angel
Update: 2024-07-04 10:13 GMT
ஆட்சியர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்வு செய்து, தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம் 2016 பிரிவு 19 இன்படி தற்காலிகமாக 59 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஜூலை 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.எனவே, விருப்பமுள்ளோர் ஜூலை 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.