மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-20 06:49 GMT

 ஆட்சியர் சங்கீதா

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மீன்வள உதவியாளர் பணியிடத்தினை நடைமுறைகளில் உள்ள விதிகளின் படி நேரடி பணி நியமனம் செய்ய அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி ஒரு பணியிடத்திற்கு 1:5 என்ற விகிதத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியல்களுடன் நாளிதழ் விளம்பரம் மூலம் பெறப்பட்ட தகுதியான நபர்கள் சேர்த்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு (சம்பளம் விகிதம் 15,900-50,400 (Level 2)) ஆதி திராவிடர் அருந்ததியர் ஆதரவற்ற விதவை முன்னுரிமை பெற்றவர் (SCA Priority) என்ற இனச்சுழற்சியின் கீழ் நீச்சல், வீச்சு வலை வீசுதல், வலை பின்னுதல் தகுதிகளுடன், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது 01.01.2024-இன் படி 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எனவே, மதுரை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது பெயர், முகவரி, குடும்ப அட்டை, அடையாள அட்டை, ஜாதி சான்று, கல்வி மற்றும் வயதுக்கான சான்று, முன்னுரிமை பிரிவிற்கான சான்று மற்றும் ஏனைய தொடர்புடைய சான்றுகள் (நகல்கள்) அடங்கிய விண்ணப்பத்தினை 02.07.2024-அன்று மாலை 05.45 மணிக்குள் துணை இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒருங்கிணைந்த வளாக முதல் தளம், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை - 625 001 (தொலைபேசி எண். 0452- 2385900) என்ற முகவரிக்கு அனுப்பிடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா,தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News