20 வருடம் விபத்தில்லாமல் இயக்கிய ஜீப் ஓட்டுநருக்கு ஆட்சியர் பாராட்டு
20 வருடம் விபத்தில்லாமல் இயக்கிய ஜீப் ஓட்டுநருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 11:05 GMT
மாவட்ட ஆட்சியர் பாராட்டு
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ஆர்.ராமச்சந்திரன். இவர், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், 20 வருடங்கள் விபத்தில்லாமல் ஜீப் ஓட்டியதற்காக அவருக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, 4 கிராம் தங்க நாணயங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.