விஐடி வேந்தருக்கு பாராட்டு விழா - அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.;
Update: 2024-06-17 08:13 GMT
அமைச்சர் சேகர்பாபு
நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் விஐடி வேந்தர் முனைவர் கோ.விஸ்வநாதனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை பாராட்டும் விதமாக சைதாப்பேட்டை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு உரையாற்றினார்.