துளிர் திறனறிதல் தேர்வு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா
துளிர் திறனாய்வு தேர்வில் பங்கு கொண்ட 65 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை கே.வி. ஜெயஸ்ரீ தலைமையில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-22 10:27 GMT
துளிர் திறனறிதல் தேர்வு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருக்கோயிலூர் ஒன்றியம் சார்பில் அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துளிர் திறனாய்வு தேர்வில் பங்கு கொண்ட 65 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை கே.வி. ஜெயஸ்ரீ தலைமையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் " விஞ்ஞான துளிர்" அறிவியல் புத்தகத்தையும் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தலைவர் ஜி.ஜானகிராமன் விழாவினை ஒருங்கிணைத்தார். உதவி தலைமை ஆசிரியர் கே.பாஸ்கரன் நன்றி கூறினார்.