குமரி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர்  வழங்கினார்.

Update: 2024-02-20 16:04 GMT
கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் ஆகியவை  இணைந்து தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து புத்தாக்க படைப்புகளை உருவாக்கி அவர்களை தொழில்முனைவோராக மாற்றும் விதமாக பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2022- 2023 ஆம் கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  140 பள்ளிகளில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்  861 புத்தாக்க சிந்தனைகளை சமர்ப்பித்தனர். இந்த  பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட  வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் தபி.என்.ஸ்ரீதர் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.          நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.
Tags:    

Similar News