தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு

தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-10-29 08:08 GMT

பாராட்டு விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றது, அதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் எஸ் சாத்விகா என்ற மாணவி 14 வயதிற்குட்பட்ட 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில், மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கம் பதக்கம் பெற்றுள்ளார், அதேபோல் தந்தை ஹென்ஸ் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் சஜீவா 14 வயதுக்குட்பட்ட 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார், தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து பெரம்பலூர் வந்த வீரர்களுக்கு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பெரம்பலூர் மாவட்டத்தின் உடற்கல்வித் துறையின் சார்பில், அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டனர்.
Tags:    

Similar News