அரகண்டநல்லூர் கமிட்டியில் ரூ. 1.69 கோடிக்கு வர்த்தகம்
அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் ரூ. 1.69 கோடிக்கு விவசாய விளை பொருட்கள் வர்த்தகம் நடந்தது.;
Update: 2024-05-28 04:28 GMT
விற்பனைக்கு வந்த விவசாய விளைபொருட்கள்
அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் 1200 மூட்டை எள் ஏலத்திற்கு வந்தது. நெல் 900 மூட்டை மட்டுமே ஏலத்திற்கு வந்திருந்தது. இதேபோல் மக்காச்சோளம் 600 மூட்டை, 80 மூட்டை மணிலா விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.எள்ளின் விலை கடந்த மாதத்தை காட்டிலும் மூட்டைக்கு ரூ. 3 ஆயிரம் வரை விலை குறைவு என்ற நிலையில், நேற்று ஒரு மூட்டை சராசரி விலையாக 10,940 க்கு விற்பனையானது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூ.1.69 கோடி வர்த்தகமானது.