ஆரணி : இலவச கண் சிகிச்சை முகாம்
Update: 2023-12-06 09:25 GMT
கண் சிகிச்சை முகாம்
திருவண்ணா மலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூரில் செவ்வாய்க் கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வேலூர் அக்கார்டு ரோட்டரி சங்கம், டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாமுக்கு ஒன்றியக் குழுத் தலைவர் கனிமொழி சுந்தர், ஊராட்சி மன்றத் தலைவர் ஷர்மிளா தரணி ஆகியோர் தலைமை வகித்தனர்.ரோட்டரி சங்கத் தலைவர் டி.சிவக்குமார், ஆரணி நகர்மன்றத் தலைவர் ஏ.சி.மணி, திமுக ஒன்றியச் செயலர் எஸ்.எஸ். அன்பழகன் ஆகியோர் கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலர் ஜெயராணி ரவி, பொருளாளர் தட்சிணா மூர்த்தி, ஒன்றியச் செயலர்கள் எம்.சுந்தர், துரை மா.மது, கண்ணமங்கலம் பேரூராட்சி செயலர் கோவர்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.