கோவையில் கள்ள நோட்டு புழக்கமா?: போலீசார் விசாரணை

கோவையில் கள்ள நோட்டுகளை கொடுத்து கார் ஓட்டுனரை ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-01-04 13:45 GMT
பைல் படம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அமர் மார்ட்டின் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரை தொடர்பு கொண்ட பிரவீன் மேனன் என்பவர் தான் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருவதாக கூறி கேரள மாநிலம் அங்கமாலி செல்ல வாகனம் வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கோவை வந்த அமர் மார்டின் பிரவீன் மேனனை அலைபேசி மூலம் தொடர்பு தொடர்பு கொண்ட போது பந்தய சாலை அருகே உள்ள தனியார் மருத்துவமனை அருகே நிற்பதாக கூறியதை தொடர்ந்து அங்கு சென்றவர் பிரவீன் மேனை ஏற்றிய பின் அருகில் உள்ள தனியார் விடுதிக்கு செல்லுமாறு கூறியதால் அங்கு சென்றுள்ளார்.

ஹோட்டலுக்குச் சென்ற பிரவீன் மேனன் தன்னுடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லை கையில் பணம் இருப்பதால் கொடுத்து விடுகிறேன் என கூறியதை நம்பிய அமர் மார்டின் கூகுள் பே மூலம் 10,000 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

பணத்தை பெற்று கொண்ட பிரவீன் மேனன் அமர் மார்டினின் அலைபேசியை வாங்கி யாருடனோ பேசி கொண்டிருந்தார். இந்நிலையில் விடுதியின் உள்ளே சென்று தனக்கு கொடுக்கப்பட்ட பணத்தை இயந்திரம் மூலம் அமர் மார்டின் சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது தனக்கு வழங்கப்பட்டது போலி நோட்டுகள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தவர் பிரவீன் மேனனை தேடி உள்ளார்.

வெளியே வந்து பார்த்தபோது அவர் இல்லாத நிலையில் அலைபேசியுடன் தலைமறைவாகியது தெரியவந்தது. மேலும் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்த காரணத்தால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்தவர் பந்தைய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கள்ள நோட்டுகளின் புழக்கம் கோவையில் உள்ளதா இங்குள்ள நபர்களுக்கி தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News