திருச்சி மாநகராட்சி சார்பில் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் இன்று நடைபெற்றது.;

Update: 2024-01-25 09:31 GMT
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் இன்று(25-01-2024) நடைபெற்றது.மாநகராட்சியின் 5-வது மண்டலத்துக்குட்பட்ட 27- வது வார்டு ஆட்டுமந்தை தெரு உடற்பயிற்சி கூடம் அருகில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து உதவி ஆணையர் வெங்கட்ராமன் முன்னிலையில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இந்தக் கூட்டத்தில் ஆட்டுமந்தை தெரு , ஆப்பகாரத் தெரு, வள்ளுவர் தெரு, பிஷப்குல தெரு, சவேரியார் கோவில் தெரு, புத்தூர் பாத்திமா தெரு, வி.என்.பி.தெரு, மீன்கார தெரு, பெருமாள் கோவில் தெரு , மூலை கொல்லை தெரு, தென்னூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர். அப்போது அவர், மனுக்கள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், 27- வது வார்டு பகுதியில் முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும்மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார் இதேபோல,திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
Tags:    

Similar News